Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரின் மூக்கை தமிழக அரசு நீதிமன்றத்தின் வழியாக அறுக்கும் - சு.வெங்கடேசன்

தனக்கு இல்லாத அதிகாரத்தில் ஆளுநர் நீட்டிய மூக்கை நீதிமன்றத்தின் வழியாக அறுக்கும் செயலில் தமிழ்நாடு அரசு இறங்கியிருக்குறது என மதுரை எம்பி சு வெங்கடேசன் பேட்டி.

mp venkatesan slams tn governor rn ravi in madurai
Author
First Published Jul 1, 2023, 5:12 PM IST

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததன் படி பிரபல பின்னணி பாடகர்  டி. எம். சௌந்தர்ராஜனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முழு திருஉருவ வெங்கல சிலை அமைப்பதற்கான பணிகள் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. தெற்கு தொகுதிக்குட்பட்ட முனிச்சாலை பகுதியில் சிலை வைப்பதற்கான பீடம் அமைக்கும் கட்டிடம்  துவக்கப்பணியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், நகராட்சி மேயர். இந்திராணி ஆகியோர் இந்த பணியை இன்று காலை துவக்கி வைத்தனர். 

தொடர்ந்து செய்திகளிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரையில் இசை அடையாளமான டி.எம்.எஸ் செளந்தர்ராஜன் திருவுருவ சிலை அமைக்கப்படும் என  முதல்வர் அறிவித்தார். அதன்படி கட்டட துவக்க விழாவினை இன்று எம்.எ.ஏக்களுடன் துவங்கி வைத்துள்ளோம்.  விரைவில் இந்த சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். 

எம்.பி.க்காக ரயில்வே கேட்டை மூட விடாமல் அடாவடி செய்த திமுகவினர் - நிலக்கோட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு

மேலும், தமிழ்நாடு ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து தொடர்ந்து பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஜனநாயக சக்திகள் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தான் செய்த வேலையை திரும்ப பெறுகிறார். இது தொடர்ந்து பலமுறை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் முத்திரை இல்லாமலே அனுப்பினார். 

திருவள்ளுவர் ஆண்டு இல்லாமலேயே அழைப்பிதழ் அனுப்பினார். இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து அமைச்சரை நீக்கும்  அறிவிப்பை  பத்திரிகையாளர்  குறிப்பின் மூலம் அனுப்புகிறார். ஒரு பத்திரிகையாளர் குறிப்பின் மூலம் அமைச்சரை நீக்க முடியும் என்கிற அதிகாரத்தை யார் கொடுத்தது? நீதிமன்றத்தில் இது குறித்து பல தீர்ப்புகள் உள்ளன.

32 நிலையங்களுடன் 39 கி.மீ.க்கு ஓடத்தயாராகும் கோவை மெட்ரோ ரயில்; 15ல் திட்ட அறிக்கை தாக்கல்

ஆளுநரின் மூக்கு எவ்வளவு நீளம் நுழைய வேண்டும் என்பது அளந்து வைத்துள்ளார்கள். நீதிமன்றம் மூலம்  நுழைகின்ற மூக்கை கத்திரிக்கின்ற வேலையை நீதிமன்றங்கள் தொடர்ந்து செய்திருக்கின்றன. இப்பொழுதும் அவர் தன் உத்தரவை வாபஸ் பெறவில்லை என்றால் தனக்கு இல்லாத அதிகாரத்தில் நீட்டிய மூக்கை நீதிமன்றத்தின் மூலம் நறுக்குகின்ற செயலை தமிழ்நாடு அரசு செய்ய இருக்கிறது என்பதை  தெரிந்த ஆளுநர் நள்ளிரவு உத்தரவை உடனடியாக  வாபஸ் பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து மண்னை கவ்விக் கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர், அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் கோரிக்கை. அதையே நாங்களும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios