Asianet News TamilAsianet News Tamil

+2 தேர்வு ரத்தால் ஒரு நன்மையும் இல்லை... பகீர் கிளப்பும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்...!

மாணவர்களின் நலன் கருதியும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 

MP Su venkatesan said cancel the CBSE board exams but go ahead with the Neet exams
Author
Chennai, First Published Jun 2, 2021, 1:11 PM IST

நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாநில மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. அந்த வழக்கில்  வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

MP Su venkatesan said cancel the CBSE board exams but go ahead with the Neet exams

இதனிடையே நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதியும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இதனை மதுரை  எம்.பி. சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

MP Su venkatesan said cancel the CBSE board exams but go ahead with the Neet exams

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள #Covid19 சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதே காரணங்களை விமர்சித்தும், தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்தியும் மதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios