வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலத்தில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக, தன் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.