Asianet News TamilAsianet News Tamil

படுக்கையில் உயிர் பிரிந்த தாய்.. அருகில் அமர்ந்து கதறிய குழந்தை.. கண்ணீர் வரவழைக்கு ஒற்றை போட்டோ..

தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை கட்டிப்பிடித்து சிறுவன் உறங்கியதுடன், காலையில் அவர் கண் விழிக்காததை கண்டு அவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சகாரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது.

Mother dies in bed .. Baby sitting nearby and weeping .. Single photo for tears ..
Author
Chennai, First Published Sep 8, 2021, 5:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை கட்டிப்பிடித்து சிறுவன் உறங்கியதுடன், காலையில் அவர் கண் விழிக்காததை கண்டு அவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சகாரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த துயர சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராதிரி கொத்தகூட மாவட்டத்தின் நடந்துள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என இந்த உலகில் உயர்ந்த ஸ்தானத்தை வரிசைப்படுத்துகையில் அனைத்திற்கும் முதலில் இருப்பது ஈன்றெடுத்த தாய் தான். தாயே குழந்தைகளின் முதல் உலகம், உலகமாக இருந்து இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் குழந்தைக்கு கற்றுத்தர வேண்டிய தாய், அந்த குழந்தையை பாதியிலேயே பறிதவிக்கவிட்டு மரணித்துபோகும் சம்பவம் எவ்வளது துயரமானது, அந்த குழந்தைக்கு அது எவ்வளவு கொடுமையானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அந்த தாயின் இடத்தை எவர் ஒருவராலும் இட்டு நிரப்பவும் முடியாது. அப்படிப்பட்ட தாயின் உறவை பால்மனம் மாறாத சிறுவன் பிருந்துள்ள துயரச் சம்பவம் தெலங்கானா மாநிலம் பத்ரி கொத்த கூடம் மாவட்டம் வரராவ் பேட்டையில் நடத்துள்ளது. 

Mother dies in bed .. Baby sitting nearby and weeping .. Single photo for tears ..

இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பலூன்கள் விற்று பிழைப்பு நடத்தி வந்தார் நிர்மலா (வயது 45) அவர் அவருடைய குழந்தை மகன் கிருஷ்ணாவுடன் (7)  சாலையோரத்தில் தங்கி வசித்து வந்தார். இவர் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார், இந்நிலையில் நிர்மலா  கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் மழை பெய்ததன் காரணமாக அவரால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை,

தனது மகனுக்கு மட்டும் உணவு தயாரித்துக் கொடுத்து அவர் காய்ச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.  திறந்த வெளியிலேயே காலை முதல் இரவு வரை அவர் குளிர்காற்றில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது மகன் கிருஷ்ணாவுக்கு அருகில் உறங்கினார். பொழுதும் விடிந்தது, கண்விழித்து பார்த்த மகன் கிருஷ்ணாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தாய் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. பலமுறை தாயை எழுப்ப முயற்சித்த கிருஷ்ணா அழத் தொடங்கிவிட்டான். 

Mother dies in bed .. Baby sitting nearby and weeping .. Single photo for tears ..

எவ்வளவோ கதறியும் தாய் கண்விழிக்கவே இல்லை, இதனால் சாலையில் செல்பவர்களை தனது தாயிடம் அழைத்து வந்து எங்கள் அம்மா எழுந்திருக்கவில்லை என்பதை காட்டினார். நிர்மலா ஏற்கனவே இறந்துவிட்டால் என்பதை அறிந்த அவர்களால் சிறுவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. தாய்க்காக கதறிய கிருஷ்ணாவை தேற்றி அவர்கள், அவனின் தவிப்பை கண்டு, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் கதறி அழுதனர். சிறுவனின் பரிதவிப்பு கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் தாய் நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mother dies in bed .. Baby sitting nearby and weeping .. Single photo for tears ..

அதனையடுத்து அந்தப் பெண்ணிடமிருந்து ஆதார் அட்டையை வைத்து ஹைதராபாத் மற்றும் வாராங்கல்லில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நிர்மலா தனது கணவரை விட்டுப் பிரிந்த மகனுடன் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிந்தது. தற்போது சிறுவன் கிருஷ்ணா நிர்மலாவுக்கு தெரிந்த மற்றொரு பெண்ணுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுவனின் இந்த துயர நிலை பலரையும் துயர்த்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios