Asianet News TamilAsianet News Tamil

கொரோனா லீவு அந்த மாதிரியான கொடுமைகளுக்கு வசதியா போச்சு.!! மகளீர் ஆணையத்திற்கு போன் போட்டு கதறும் பெண்கள்..!!

இந்த இக்கட்டான சூழலில் வீடுகளில் குடும்ப வன்முறை மூலம் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும் எனவே குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையை நாம் கண்டிப்பாக தடுத்தாக வேண்டும்

most of the lady's complaint with women's commission regarding family violence in corona leave
Author
Chennai, First Published Apr 6, 2020, 9:40 AM IST

நாடு முழுவதும் கொரானா நோய் தடுப்பு முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து பல்வேறு கடுமையான முன்முயற்சிகளை எடுத்து வருவதற்கு ஆணையத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக விலகல் தனிநபர் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இந்த நிலையில் வீடுகளில் நாம் அனைவரும் முடங்கி உள்ளோம் நாம் தனித்து இருப்பது என்பது நோய் தொற்று  பரவாமல் தடுப்பதற்காக தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் மகளிர் ஆணையத்திற்கு பல்வேறுவிதமான நபர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

most of the lady's complaint with women's commission regarding family violence in corona leave

இதன் மூலம் வீடுகளில் பெண்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள் என்பது அறியமுடிகிறது வீடுகளில் அதிகபட்சமான குடும்ப பணிகளை செய்துவருவது பெண்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே, இன்றைய சூழலில் வீட்டில் உள்ள அனைவரும் இல்லத்திலே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு உட்படுத்த படுவதால் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறுவிதமான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்  இன்றைய சூழலில் மன உளைச்சலால் அதிகமாக பாதிப்படைகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் வீடுகளில் குடும்ப வன்முறை மூலம் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும் எனவே குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையை நாம் கண்டிப்பாக தடுத்தாக வேண்டும் குடும்ப வன்முறை என்பது ஒரு குற்றமாகும் எனவே வீடுகளில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது  அப்படி ஏதாவது வன்முறை நடந்தால்  உடனடியாக அருகில் உள்ள  காவல் நிலையத்திற்கு அல்லது 181 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் .

most of the lady's complaint with women's commission regarding family violence in corona leave

தமிழ்நாடு அரசு பல்வேறு மனநல ஆலோசகர்களை மாவட்ட வாரியாக நியமித்துள்ளது அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்  ஊடகத்துறை சார்ந்த அன்பர்களுக்கு பணிவான வேண்டுகோள் தங்களுடைய ஊடகங்களில் பெண்கள் மீது வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மனநலம், ஆற்றுப்படுத்துதல்  தொடர்பான நிகழ்வுகளையும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பங்கேற்கக் கூடிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் படி  ஆணையத்தின் சார்பாக வேண்டுகிறோம் இது பெண்கள் மீது வன்முறை இல்லா சமூகம் படைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாகும் இந்த முயற்சியில் தாங்கள் சார்ந்திருக்கிற ஊடகங்களில் பெண்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு. ஊடகங்களில் வெளியாகும்  நிகழ்வுகளில் பெண்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் மிகச்சிறப்பாக இருக்கும். 

most of the lady's complaint with women's commission regarding family violence in corona leave

அதுமட்டுமன்றி அனைத்து பெண்களும்  இல்லத்தில் இருப்பதால் அவர்களுக்கு போதிய சமூக  விழிப்புணர்வு நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்பினால் சிறப்பாக அமையும்,அதிலும்  குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்கள் உரிமையும் சமூக பங்கேற்பு குறித்தும் விழிப்புணர்வும் சட்டஆலோசனைகளும் வழங்கி அவர்களுக்கு குடும்ப வன்முறை மற்றும் பல்வேறு விதமான பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் எந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் யாரை அணுக வேண்டும் என்பதையும் பற்றிய தகவல்களை  கொடுத்தால் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும்  இது தொடர்பான  கட்டுரைகள், பேட்டிகள், சாதனைப் பெண்கள் போன்றவற்றை  செய்தியாக, நிகழ்ச்சியாக தொடர்ந்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். என  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர்,  முனைவர் கண்ணகி பாக்கியநாதன் IAS  தெரிவித்துள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios