Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி கோட்டையில் இருந்து அதிமுக நிர்வாகிகளை தட்டி தூக்கிய திமுக- அதிர்ச்சியில் இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள்  அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். 
 

More than 50 AIADMK members from Edappadi constituency joined DMK KAK
Author
First Published Oct 22, 2023, 1:26 PM IST | Last Updated Oct 22, 2023, 1:26 PM IST

அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியின் காரணமாகபல பிளவுகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக தேர்வு செய்யப்பட்டார்.  பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகாரம் பெற்றதை அடுத்து அதிமுகவின் பொது செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்  மேற்கொண்டு வருகிறார்.  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சுற்று பயணம் செய்தது அங்குள்ள நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

More than 50 AIADMK members from Edappadi constituency joined DMK KAK

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

மேலும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தொடங்கி அதனையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.  இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி அருகே உள்ள  கோரணம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் கோபால் தலைமையில் அதிமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் T.M.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

மத வெறியை தூண்டி விடும் திமுக.. பலிகடா ஆகும் முஸ்லிம்கள்.. பாஜகவை தூக்கி பிடிக்கும் வேலூர் இப்ராஹிம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios