பாஜகவில் இருந்து கூண்டோடு அதிமுகவிற்கு பல்டி அடித்த மகளிர் அணியினர்..!அதிர்ச்சியில் அண்ணாமலை
அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுகவிற்கும் - பாஜகவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்லில் ஆதரவுக்காக அண்ணாமலை காக்கவைத்தால் ஏற்பட்ட அதிருப்தி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது மோதலை அதிகரித்தது. இந்தநிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை,
டிடிவி தினகரன் கூடாரத்தையே திட்டம் போட்டு காலி செய்யும் எடப்பாடி..! அதிர்ச்சியில் அமமுக நிர்வாகிகள்
அதிமுகவில் இணையும் பாஜகவினர்
திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அண்ணாமலையின் கருத்திற்கு பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட பாஜக துணை தலைவர் கங்காதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சின்னையா, சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கங்காதேவி, பாஜக தலைமை மீதான அதிருப்தி காரணமாகவும், பெண்களுக்கு பாஜகவில் உரிய மரியாதை இல்லாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக கூறினார். பெண்களை மதிக்க கூடிய கட்சியாக அதிமுக இருப்பதாக தெரிவித்தவர், இன்னும் பலர் அதிமுகவில இணைய ஆர்வமாக இருப்பதாக கூறிய கங்காதேவி ,விரைவில் அவர்களும் அதிமுகவில் இணைவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு..! வேளாண் பட்ஜெட் ஏமாற்றும் பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி ஆவசேம்