நாடாளுமன்றத் தேர்தலுக்கு  இன்னும்  சில மாதங்களே உள்ள நிலையில்   அரசியல் காட்சிகள் கூட்டணி அமைப்பது படு பிசியாக செயல்பட்டு வருகின்றன. 

அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு  முன்னதாக  தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவிலுள்ள முன்னணி ஊடகமான  இந்திய டுடே செய்தி சேனலும், கர்வி சர்வே அமைப்பும்  இணைந்து நடத்திய  கருத்து  கணிப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

சர்வேயின்படி  வரவிருக்கும் தேர்தலின் முடிவுகள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. 2019 லோக் சபா தேர்தலின் முடிவில் தொங்கு லோக் சபை உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

 

அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடந்த முறையை விட 99 இடங்கள் குறைவாக அதாவது, 237 இடங்களில் வெற்றிபெறும்.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த முறையை விட 107 இடங்கள் அதிகம் வெல்லும் 166 இடங்களில் வெற்றிபெறும்.

மாநில கட்சிகள் சுயேச்சை உள்ளிட்ட சிறிய கட்சிகள் போன தேர்தலை விட  8 இடங்கள் அதிகம், அதாவது 140  இடங்கள் வரைக் கைப்பற்றும்.    லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் தேவை. இதில் மெஜாரிட்டி பெற 272 உறுப்பினர்களின் பலம் தேவை.

அதனால், மாநில கட்சிகள், சுயேச்சை, சிறிய கட்சிகளின் ஆதரவு யாருக்கோ இருக்கிறதோ அவர்களே 2019 தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே நாடளுமன்றத்தில் தொங்கு சபை உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.