விவசாய மின் இணைப்பு மின் மீட்டர் பொருத்தியுள்ளது பல்வேறு ஐயங்களை விவசாயிகளிடம் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மின்வாரியதுறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஒரு விவசாயி என்ன வகையான மோட்டார் பயன்படுத்துகிறார், அதன்மூலம் அவர் பயன்படுத்தும் மின் திறனை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் பயன்பாடு அறிய முடியாததால், அதற்குரிய மானியத்தை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் தொடர்ந்து இடர்பாடு நீடிக்கிறது.

எனவே, முன்னேற்பாடாக அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் விவசாயிகளின் மின் பயன்பாட்டினை அறிந்து, மின்திறனை கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் மானியத்தை மத்திய அரசிடமிருந்து பெறும் நோக்கில் தான், மின்மோட்டார் பொருத்தப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அல்ல என்பது விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றனர். 

இதுகுறித்து அமைச்சர் தங்கமணி கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தான் முதல்வர் எடப்பாடியாரின் எண்ணமாகு. தட்கல் முரையில் மட்டுமே மின் இணைப்பு பெறுவோருக்கு ரீடிங் எடுப்பதற்காக மீட்டர் பொறுத்தப்பட்டது. தற்போது அதற்கும் மீட்டர் பொறுத்த வேண்டாம் என  முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்றதால் அதிக குதிரை திறன் உடைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகள் இதற்காக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இத்ற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30ம் தேதி வரைநீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது’’என அவர் தெரிவித்துள்ளார்.