money for vote in rk nagar

இடைத் தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகரில் அரசியல் பிரச்சாரம் தற்போதே நடைபெறத் தொடங்கியுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இதற்கிடையே பலத்த கண்காணிப்பையும் மீறி 40 மற்றும் 42 ஆவது வார்டில் பணப்பட்டுவாடா நடப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.