Asianet News TamilAsianet News Tamil

மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது புகுந்த நாய்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

சீன அதிபருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கிய ஜி ஜின்பிங், பிறகு மாலை 4 மணியளவில் ஓட்டலிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார். 5  மணி அளவில் மாமல்லபுரம் வந்தடைந்த ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு பகுதியில் வரவேற்றார்.
 

Modi - Xingping meeting in mamallapuram
Author
Mahabalipuram, First Published Oct 11, 2019, 10:19 PM IST

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பின் போது நாய் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Modi - Xingping meeting in mamallapuram
சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சீன அதிபருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கிய ஜி ஜின்பிங், பிறகு மாலை 4 மணியளவில் ஓட்டலிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார். 5  மணி அளவில் மாமல்லபுரம் வந்தடைந்த ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு பகுதியில் வரவேற்றார்.

Modi - Xingping meeting in mamallapuram
கை குலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி, பிறகு அர்ஜூனன் தபசில் உள்ள சிற்பங்கள், அங்குள்ள குடைவரை கோயில் ஆகியவற்றை சீன அதிபர் ஜின்பிங்குக்கு சுற்றி காட்டினார். அதைப் பற்றியும் சீன அதிபருக்கு விளக்கினார். அர்ஜூனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்களை விளக்கிக் கொண்டிருந்தபோது கறுப்பு நிற நாய் ஒன்று அந்தப் பகுதியில் புகுந்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நாய் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதை விரட்டவும் முடியாமல் அவதியடைந்தனர். என்றபோதும் சற்று நேரத்தில் நாய் அங்கிருந்து விரட்டப்பட்டது.Modi - Xingping meeting in mamallapuram
இந்தச் சம்பவம் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாமல்லபுரம் கடந்த ஒரு வாரமாக போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்புக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் தலைவர்கள் சந்திப்பின்போது நாய் புகுந்ததால், பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios