பாஜகவே அதிக இடங்களை பிடிக்கும் என ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, மோடியே அடுத்த பிரதமர் ஆவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துக்கணிப்புகள் ஒரு புறம் எனில், ஜாதகம், எண் ஜோதிடம், தேர்தல் தேதி மற்றும் மோடியின் ஜாதகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டதிலும் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் எனவும் மோடியே பிரதமர் ஆவார் எனவும்  சேல,ததைச் சேர்ந்த ஜோதிடர் ஹரி  என்பவர் தெரிவித்துள்ளார்.


கடந்த முறை மோடி பிரதமரான போது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியின் கூட்டு எண்ணிக்கை, எண் ஜோதிடப்படி பாஜக என்கிற ஆங்கில எழுத்தின் கூட்டு எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து சில கணிப்புகளை  இவர் கணித்துள்ளார்.

2014ம் ஆண்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி 16-05-2014. அதன் கூட்டு எண்ணிக்கை 1+6+5+2+0+1+4 = 19 என வருகிறது. அதேபோல், பாஜகவின் கூட்டு எண்ணிக்கை, அதாவது BJP-ல் B என்பது ஆங்கில எழுத்துக்களில் 2வது இடத்தில் வருகிறது. அதேபோல், J எழுத்து 10ம் இடத்திலும், P எழுத்து 16ம் இடத்திலும் வருகிறது. அதன் கூட்டுத்தொகை 28. எனவே, 19 ஐ 28 ஆல் பெருக்கினால் 532 வருகிறது. அதை 2 ஆல் வகுக்க 266. அதோடு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி 16 ஐ கூட்டும் போது 282 வருகிறது. இதுதான் 2014ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளாகும்.

அப்படி பார்க்கும்போது இந்த முறை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதி 23-05-2019. எனவே, 2+3+5+2+0+1+9 என்பதன் கூட்டணி 22 வருகிறது. பாஜக எண்ணின் கூட்டு எண்ணிக்கை 28. இரண்டையும் பெருக்கினால் 616. அதை 2ல் வகுக்க 308 வருகிறது. அதோடு, தேர்தல் முடிவு வெளியாகும் தேதி 23ஐ கூட்டினால் (308+23) 331 வருகிறது.

பெரும்பாலன கருத்துக்கணிப்புகள் இந்த முறை பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனக்கூறிவருகிறது. எனவே, இந்த கணக்கு அந்த முடிவுடன் ஒத்துப்போகிறது.எண் கணிதப்படி மட்டுமல்ல. மோடியின் ஜாதகப்படியும் இந்த முறை அவரே பிரதமராக வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர் ஹரி கூறுகிறார்.

மோடியின் ஜாதகப்படி தற்போது விருச்சக லக்ணாதிபதி செவ்வாய் திசை துவங்கவுள்ளது. எனவே, அவரே (செவ்வாய்) லக்ணத்திற்கும், 6ம் இடத்திற்கும் அதிபதி ஆவார். எனவே, லக்கணத்திற்கு சாதகமாகவே பலன் அளிப்பார். 6ம் இடம் என்பது எதிரிகள் ஸ்தானத்தை குறிக்கும். எனவே, இரண்டு ஆதிபத்தியத்திற்கு உரிய கிரகம் லக்ணாதிபத்தியத்தை எடுக்கும். எனவே, இந்த ஜாதகர் எதிர்ப்புகளை வீழ்த்தி வெற்றி அடைவார்.