"தென்னைமரத்துல தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறிகட்டுமாம்" இந்த மாதிரி தான் இருக்கிறது வேலூர் நிலைமை இருக்கிறது. நடந்த முடிந்த தேர்தலில் 353 தொகுதியில் பிஜேபி கூட்டணி வென்றது, தனியாக 303 தொகுதியென பெரும்பான்மை பலத்தோடு இருந்தாலும், வேலூர் தொகுதியை விட்டுவிட்டால் மோடியின் சரிவு ஆரம்பம் என மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்கள் துள்ளிகுதிப்பார்கள். இது தன்னுடைய அரசியல் ஹிஸ்ட்ரியில் மறையாத வடுவாக மாறிவிடும்.

ஒரு தொகுதிதானே என நினைத்து சைலண்ட்டாக இருந்துவிடக்கூடாது. இது மானப்பிரச்சனை என மிரண்ட மோடி, ஜே.பி.நட்டா, நிர்மலா சிதாராமன், நிதின் கட்கரி, பியூஸ் கோயல்  உட்டிட்ட தனது தளபதிகளுக்கு வேலூர்  தொகுதியை நேரடியாக பார்வையிட கண்காணிப்பில் வைத்துக்கொள்ள சொல்லியுள்ளாராம். வேலூர் தொகுதியில் ஒவ்வொரு பார்ட்டாக இவர்கள் உள்ளார்களாம். ஓபிஎஸ் டெல்லி சென்ற சமயத்தில் அவரிடம் "இது மானப்பிரச்சனை" என மோடி சொன்ன ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லி அனுப்பினார்களாம்.

பிஜேபியே நேரடியாக இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தியதால் ஏசிஎஸ்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட்,உள்ளூர் அமைச்சர் வீரமணி ஜாதி பிரச்சனையில், துரைமுருகனுக்கு இணக்கமாக இருந்தாலும் கவலையில்லயாம், காரணம் மோடியின் அதிரடி உத்தரவு தானாம்.  மோடியின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் நேரடி கண்காணிப்பில் இறங்கியுள்ளார்களாம்.

 

இந்நிலையில், வேலூர் மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 2000 வரை கொடுக்க உள்ளார்களாம், ஆனால் திமுகவை பொறுத்தவரை வெறும் 200 ரூபாய் கொடுக்கவுள்ளார்களாம். ஓபிஎஸ்சின் டெல்லி பயணத்துக்குப்பிறகு அனைத்து அமைச்சர்களையும், போனில் அழைத்து மேலிட உத்தரவை சொல்லியுள்ளதால், இதனால் அமைத்து நிர்வாகிகளும் தங்களது கைக்காசை வாரி இறைக்க உள்ளார்களாம். இதுவரை 200 நிர்வாகிகள், அமைச்சர் என மொத்தமாக ஓடி ஓடி வேலை பார்த்து வரும் நிலையில், இன்னும் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுத்திருந்து பார்ப்போம் துரைமுருகனின் ராஜதந்திரம் பலிக்குமா? இல்ல அதிமுகவின் பண, படை பலம் வெல்லுமா? என்று...