Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: சீனாவின் ஆவேசத்துக்கு பயந்து இந்திய பகுதியை ஒப்படைத்து விட்டார் மோடி...ராகுல்காந்தி ஆக்ரோஷம்!

 சீனாவின் ஆவேசத்துக்கு பயந்து இந்தியாவின்ன் எல்லைப்பகுதியை பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 
 

Modi surrendered to India over fear of China's anger ... Rahul Gandhi's aggression
Author
India, First Published Jun 20, 2020, 11:14 AM IST

சீனாவின் ஆவேசத்துக்கு பயந்து இந்தியாவின்ன் எல்லைப்பகுதியை பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். Modi surrendered to India over fear of China's anger ... Rahul Gandhi's aggression

இந்தியப் பகுதிக்குள் சீனர்கள் நுழையவில்லை, எந்த ஒரு பகுதியும் கைப்பற்றப்படவில்லை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதையடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது தன் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் இந்தியப் பகுதியை சீன ஆவேசத்துக்கு ஒப்படைத்து விட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் 1. ஏன் நம் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்? 2. எங்கு அவர்கள் கொல்லப்பட்டார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Modi surrendered to India over fear of China's anger ... Rahul Gandhi's aggression

அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசு இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் செய்தார். உளவுத்துறை தோல்வியா? இப்போது இந்த நேரம் வரையில் கூட நெருக்கடியின் முக்கிய அம்சங்கள் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை என்று சோனியா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios