நேற்று சீன அதிபர் முறைசாரா மாநாட்டில் கலந்து கொள்ள மாமல்லபுரம் வந்திருந்தார். அவரை வரவேற்ற  மோடி தமிழ் பாரம்பரிய ஆடையான வேஷ்டி- சட்டை துண்டு அணிந்து வரவேற்றார். அந்த ஆடையுடன் மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றிக்காட்டினார் மோடி. 

இன்று கோளவத்தில் தமிழ் படைப்புக்களை பார்வையிட்டனர். அப்பொழுது, சீன அதிபர் முகம் பதித்து நெய்யப்பட்ட பட்டு சேலையை அவருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். அதை கண்டு சீன பிரதமர் வியப்படைந்தார் .

சீன அதிபரிடம், காஞ்சி பட்டு தறியில் நெய்வது, குத்து விளக்கு, கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார் பிரதமர் மோடி. சீன அதிபருக்கு பட்டாடையை பரிசளித்தார் பிரதமர் மோடி. சீன அதிபருக்கு பிரதமர் மோடி அளித்த மதிய விருந்து நிறைவு பெற்றது. கோவளம் தனியார் விடுதியில் இருந்து சென்னை புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். மோடியும் டெல்லி புறப்பட்டு சென்றார்