தேர்தல் முடிவுக்கு பிறகான எக்சிட் போல் ரில்டில் பாஜக 250 முதல் 360  இடங்களை வரை வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் அடித்து கூறின. இதனையொட்டி 36 கட்சிகளை டெல்லிக்கு அழைத்து பாஜக அசோகா ஹோட்டலில் விருந்து வைத்தது. 

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக பாஜகவினர் கடும் உற்சாகமடைந்து வருகின்றனர். ஆனால் எக்ஸிட் போல் வெளியான பிறகு நடக்கும் சில சம்பவங்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளது. இந்த சம்பவங்கள் தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை உணர்த்துகின்றன. 

காங்கிரஸ் கட்சி மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான ரஃபேல் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் வெகுவாக பாராட்டியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடும் எதிர்ப்பை மீறி டிடிஹெச் சேவைகளில் ஒளிபரப்பாகி வந்த பாரதிய ஜனதா கட்சி நடத்தி வந்த நமோ டிவி அனைத்து டிடிஹெச் சேவைகளிலிருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த பங்குச்சந்தை, பாஜக கூட்டணி வெற்றி பெரும் என தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பாஜக ஆட்சி அமைக்கும் என வெளியானதும் வெகுவாக உயர்ந்தது. ஆனால், இன்று பங்குசந்தை முடிவில் மோசமான சரிவை சந்துத்துள்ளது.  

ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடைபெற்றபோது போடப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது தவிர தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை என தேர்தலை ஆணையம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கப்போவது இல்லை என அறிவித்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்போது தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிரானதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சி தலைமை இந்த சம்பவங்களின் பின்னணியை உற்றுநோக்கி வருகிறது.