பாஜக காவி சாயம் பூச முயல்கிறது. அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச நினைத்தாங்கள் நாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம். ஒருபோதும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன். என்னை யாரும் அங்கு அழைக்கவும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இது பெரும் விவாதமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கூடங்குளம் போராட்டக்காரரான எஸ்.பி.உதயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள கருத்தில், ’’கடுங்காவி ரஜினிகாந்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சி நடக்கிறது, தமிழர்களே! ஏமாந்துவிடாதீர்கள். வழக்கம்போல ரஜினி வாயை மட்டும் அசைக்கிறார். இந்தப் படத்துக்கு வசனகர்த்தா குருமூர்த்தி, இயக்கம் மோடி, தயாரிப்பு அமித் ஷா எனத் தெரிவித்துள்ளார். 

 

மற்றொரு பதிவில், ‘’நாட்டையே அழித்துக்கொண்டிருக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துவிட்டு, எந்தவிதப் பொறுப்புணர்வுமின்றி ஜப்பான் நாட்டுக்கு மோடி புறப்பட்டுச் சென்ற நாள்! அணு அணுவாய் அழிந்துகொண்டிருக்கிறோம்’’எனக் கூறி உள்ளார்.