Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் விலையை வானளாவிய உயர்த்திய மோடி.. செங்கோட்டைக்கு போய் போராடுங்க அண்ணாமலை.. காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்!

"தமிழக மக்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் அண்ணாமலை செங்கோட்டைக்கு சென்று மோடிக்கு எதிராக போராட நடத்த வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Modi raises petrol prices .. Go to Red Fort for protest Annamalai .. Congress MP says!
Author
Madurai, First Published May 24, 2022, 9:42 PM IST

செங்கோட்டைக்கு செல்லவேண்டிய அண்ணாமலை வழிமாறி ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் 142 வது சட்ட விதியைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. விடுதலையான பேரறிவாளன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றபோது அவரை அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். மேலும் பேரறிவாளன் விடுதலையை சில அமைப்பினர் கொண்டாடி வருவதால் காங்கிரஸ் கட்சி அதை வெளிக்காட்ட முடியாமல் கோபத்தில் உள்ளது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாகவும் அவருக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டித்துள்ளார்.

Modi raises petrol prices .. Go to Red Fort for protest Annamalai .. Congress MP says!

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவின் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஓபிசிஅணி தலைவர் நவின் வரவேற்புரை கூறினார். விழாவுக்கு தலைமையேற்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் தீர்மானம் மொழிபெயர்ப்பு புத்தகமும் வெளியிடப்பட்டது. பின்னர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பேரறிவாளன் குற்றமற்றவர் போல சீமான் உள்ளிட்ட கட்சிகள் சித்தரிக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலையானது மன வேதனையை தரக்கூடிய விஷயம். பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவது வருத்தத்துக்குரியது. 

Modi raises petrol prices .. Go to Red Fort for protest Annamalai .. Congress MP says!

பேரறிவாளன் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறவில்லை. அவரை குற்றவாளி என்றுதான் நீதிமன்றம் சொல்கிறது. எனவே, பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவது எந்தக் கட்சியாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களுக்கும் இந்தியா மக்களுக்கும் அது வீழ்ச்சியாக இருக்கும். 2014-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து சென்றது. மோடி அரசு வந்தவுடன் பெட்ரோல் விலையை வானளாவிய உயர்த்திய பெருமையை மோடி அரசு பெற்றது. தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் விலையை இல்லை. அண்ணாமலை மோடி அரசை எதிர்த்துதான் போராட வேண்டும். செங்கோட்டைக்கு செல்லவேண்டிய அண்ணாமலை வழிமாறி ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார். தமிழக மக்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் அண்ணாமலை செங்கோட்டைக்கு சென்று மோடிக்கு எதிராக போராட நடத்த வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios