அப்படிப்போடு..!  கருப்பு பலூன் விட்ட தமிழகத்தில் மோடி போட்டியிட அதிரடி  பிளான்..! 

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதும் கருப்பு பலூன் பறக்க விடுவதுமாக உள்ளது தமிழகத்தின் நிலைப்பாடு...

இந்நிலையில் இதனையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத மோடி இதே தமிழகத்தில் போட்டியிட அதிக ஆசையோடும் விருப்பத்தோடும் திட்டம் போட்டு உள்ளதாக ரகசிய தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து அந்த தொகுதியில் பிரதமர் மோடியை முன்னிறுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையானதா என்ன பாஜக தரப்பில் இருந்து எந்த ஒரு சரியான பதிலும் இல்லை என்றாலும் கூட இதுதான் உண்மை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவிற்கு வட இந்தியாவில் ஒரு சில மாநிலத்தில் செல்வாக்கு குறைந்து சில தொகுதிகளை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டாலும் அதனை சரிசெய்யும் பொருட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் குறிவைத்துள்ளது பாஜக. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து குறைந்த பட்சம் ஆறு தொகுதிகளிலாவது வெற்றி பெறுவது என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளது பாஜக. குறிப்பாக கன்னியாகுமரி,கோயம்பத்தூர் அல்லது திருப்பூர் இதில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் மோடிக்கு பொதுவாகவே தமிழகத்தின் மீது தனி கவனம் உண்டு மேலும் சமீபத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கு பெற்றார். இது தவிர இதற்கு முன்னதாக அப்துல் கலாம் இறப்பின் போதும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சரி.. அதாவது திமுகவும் சரி அதிமுகவும் சரி அப்போதைய ஜெயலலிதா அல்லது கருணாநிதியோ இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி அனைத்துமாக இருந்து அப்துல் கலாமிற்கு பெருத்த அஞ்சலி செலுத்தினார்.

கஜா புயல் பாதிப்புக்கு பின் ஒரு இரங்கல் கூற தெரிவிக்காத மோடி, எப்படி தமிழகத்திற்கு வரலாம் என எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயத்தில் தான், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின்  இறுதி அஞ்சலிக்கு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் கூட செல்லவில்லை அன்றைய திமுக கருணாநிதி மற்றும் அதிமுக ஜெயலலிதா என விமர்சனம் எழுந்துள்ளது.