MODI IS TAKING NEW CHARGE AS NATIONAL INTELLIGENCE AGENCY DIRECTOR

இந்தியாவை கலக்க வரும் மற்றொரு மோடி...

மோடி என்றாலே அது நம் நாட்டு பிரதமர் தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவை ஒரு கலக்கல் பாதைக்கு கொண்டு செல்லும் ஒரு மாமனிதர் என்று கூட மோடியை பற்றி கூறலாம்.இந்நிலையில் பிரதமர் மோடியின் பெயரிலேயே மற்றொரு மோடி முக்கிய பதவியை ஏற்க உள்ளார்

யார் இந்த மோடி ?

ஒய்.சி. மோடி தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது என்.ஐ.ஏ.,வின் இயக்குனராக உள்ள ஷரத் குமாரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. அவருக்குப் பின்னர் இவர் இயக்குனராக பொறுப்பேற்பார்.

உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குஜராத் கலவர வழக்கின் சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றவர் ஒய்.சி மோடி. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான மோடி, அஸ்ஸாம் - மேகாலயா கேடரில் 1984ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர். ஷில்லாங்கின் ஏடிஜிபியாகவும் சிபிஐ.,யின் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றியவர் ஒய்.சி.மோடி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மோடியை போன்றே இவரும் அதிரடியாக முடிவுகளை எடுத்து கலக்குவாரா என மக்கள் எதிர்பார்கின்றனர்