மோடி பிரதமர் போலில்லாமல் ஒரு வியாபாரியைப் போல நடந்து கொள்கிறார் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். குடியரசுத்தலைவர் வேட்பாளர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மோடி பிரதமர் போலில்லாமல் ஒரு வியாபாரியைப் போல நடந்து கொள்கிறார் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். குடியரசுத்தலைவர் வேட்பாளர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த வகையில் யஷ்வந்த் சின்ஹா மிகச் சிறந்த நிர்வாகி என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சிங்கா இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்தார். அப்போது விமான நிலையம் சென்று அவரை வரவேற்ற அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மேடையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
ஜலவிகாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் பேசிய விவரம் பின்வருமாறு:- யஷ்வந்த் சின்ஹா முன்பு நிதி அமைச்சராகவும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார், ஜனாதிபதி தேர்தலில் நல்ல வேட்பாளரை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேட்பாளர்களில் யார் சிறந்தவர்கள் என ஒப்பீடு செய்து மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை கேட்டுக் கொள்கிறேன். யஷ்வந்த் சின்ஹா அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவர் வெற்றி பெற்றால் நாட்டின் கவுரவம் உயரும்.
இதையும் படியுங்கள்: சந்திர சேகர் ராவ் இந்த கீழ்த்தரமான வேலை செய்யலாமா.?? பாஜவை பார்த்து பயமா..KCR ஜ போட்டு பொளக்கும் அமைச்சர்.
தற்போது நாட்டின் நிலைமை நன்றாக இல்லை, பாஜக ஆட்சியில் நாடு அழிந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியலில் தரமான மாற்றம் வரவேண்டும், அதற்கான தேவையை அதிகரித்துள்ளது, நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். இன்று பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார், இரண்டு நாட்கள் இங்கேயே இருங்கள், ஆனால் அவரது கட்சிக்காரர்கள் எங்களுக்கு எதிராக கூச்சல் போடுகிறார்கள். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கலாம், பேசுங்கள் ஆனால் அதற்கு முன் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

முதல்முறையாக பிரதமரான போது பல வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தார், அந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? ஒன்றையாவது செய்திருந்தால் அதைப் பற்றி விளக்குங்கள். டார்ச் லைட் அடித்து தேடினாலும் ஒன்றும் கிடைக்காது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றார், ஆனால் செலவுகள் தான் இரட்டிப்பாக்கி இருக்கிறது. பெட்ரோல், டீசல், உரம் மின்சாரம் அனைத்து விலைகளும் உயர்ந்துள்ளது. நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் 9 மாதங்களாக போராட்டம் நடத்தினர், ஆனால் அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும், காலிஸ்தானிகள் என்றும் நீங்கள் கூறினீர்கள்.
போராட்டக்காரர்கள் மீது கார் மோதி கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 700 விவசாயிகள் உயிரிழந்தனர், தேர்தலுக்கு முன் இனிமையான வார்த்தைகள் பேசப்பட்டது ஆனால் தேர்தலுக்குப் பிறகு மோடி ஏமாற்றுகிறார். நீங்கள் கொண்டு வந்த விவசாய சட்டங்கள் நன்றாக இருந்தால் ஏன் அது ரத்து செய்யப்பட்டது. இதுவரை 9 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளது. உங்கள் ஆட்சியில் நாட்டின் மரியாதை மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன் எப்போதும் இப்படி நடந்ததில்லை, இதுதான் நேர்மையான அரசியலா? இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி டன்னுக்கு 4000, ஆனால் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இருந்து டன் ஒன்றுக்கு 20 ஆயிரம் 30 ஆயிரம் விலைக்கு வாங்குகிறார்.

மொத்தத்தில் பிரதமர் மோடி பிரதமராக செயல்படவில்லை அவரின் நண்பர்களான தொழிலதிபர்களின் விற்பனையாளராக செயல்படுகிறார். கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னீர்கள் எங்கே கொண்டு வந்தீர்கள். ஆனால் மோடியின் ஆட்சியில் தான் ஸ்விஸ் வங்கிகளில் கணக்குகள் அதிகரித்துள்ளன, இது வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல, எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது. நாட்டுமக்கள் எல்லோருக்குமே தெரியும் சீனாவைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள் அதன் பொருளாதாரம் 16 ட்ரில்லியன் ஆக வளர்ந்துள்ளது. இன்னும் நாம் 3 ட்ரில்லியனை எட்டவே போராடிக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு வளங்கள் இருந்தும், இளைஞர்கள் இருந்தும் பின்தங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
