பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரது நிகழ்ச்சிகள் அனைத்திலும் டீ விற்பனை செய்து வரும் அசோக் என்கிற இளைஞர் டெல்லியில் பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் பங்காற்றார்

17வது பிரதமராக மோடி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழா கடுமையான பாதுகாப்புடன் நடைபெற்றது. 8 ஆயிரம் விஐபிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் முசாஃபர்பூரை சேர்ந்த அஷோக் என்ற இளைஞர் விழா நடக்கும் இடத்திற்கு அருகில் டீ விற்றார்

 

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் தனது உடலில் மோடியின் உருவத்தை வரைந்து சட்டை இல்லாமல் டீ விற்று வருகிறார் அசோக். இதே வேடத்தில் பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கும் அவர் வந்து டீ விற்று வருகிறார். ‘’ டீ விற்றுவிட்டு, கூட்டம் முடிந்த பின்னரே இந்த இடத்தை விட்டு செல்வேன்’ என அவர் கூறுகிறார். பிரதமர் மோடியும் சிறு வயதில் டீ விற்றவர் எனக்கூறப்படுகிறது.