நாடு முழுவதும் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 6 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் 7 ஆவது கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது. இந்நிலையில்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். 

சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி பேசுகையில்,  மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய நடிகரை (மோடியை) நீங்கள் பிரதமராக தேர்வு செய்திருக்கிறீர்கள். 

அவருக்கு பதிலாக நீங்கள் அமிதாப்பச்சனைக்கூட தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். யாரும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை என்பது வேறு விஷயம் என்று தெரிவித்தார்.

இனியாவது ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என பிரியங்கா காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசினார்.