ராணுவ தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காகவும், அடையாறு புற்று நோய் மருத்துவனையில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்பதற்காகவும், கடும் எதிர்ப்பையும் மீறி  பிரதமர் மோடி சென்னை விமான நிலையயம் வந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது,

திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராணுவ கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் சற்றுமுன் சென்னை வந்தார். அவரை ஆளுநர் புரோகித், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மகாபலியுரம் செல்கிறார். பின்னர் ராணுவ கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை செல்கிறார். அங்கிருந்து மீண்டும்  ஹெலிகாப்டர் மூலம் கிண்டி ஐஐடி க்கும், இதையடுத்து ஐஐடிக்கு உள்ளே உள்ள பாதை வழியாக அடையாஸ புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்கிறார்.

இதையடுத்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்லும் மோடி பின்னர் டெல்லி செல்கிறார்