நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று இரவு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் நாட்டு மக்களுக்கு சுதந்திர நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

இந்த விழாவில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.