வேளாண் மசோதாக்களை அமல்படுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பெரும் அநீதி இழைத்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கானொளிக்காட்சியில்.... "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது" என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளிடம் ஆலோசனை செய்யாமல் எந்த வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியது இல்லை. ஆனால் மோடி அரசு, விவசாயிகளிடம் ஆலோசிக்காமல், முதலாளிகளுடன் ஆலோசித்து சட்டங்களை அமல்படுத்துகிறது.வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபடும்.