ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை  விதிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி, தெரிவித்து இருந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.  முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.