தமிழகத்துக்கு எதிரானவராக சித்தரித்து வந்தன தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சில. அவர் தமிழகம் வரும்போதெல்லாம் கோபேக் மோடி என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்பு பலூன்களை பறக்க விட்டு கலகம் செய்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சட்டைசெய்யவில்லை மோடி. 

சீன அதிபர் ஷி ஜின் பிங் சந்திப்புக்கு தமிழகத்தை மோடி தேர்வு செய்த போதே அவர் தமிழ்கம் மீது கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தி விட்டார்.  அடுத்து அமெரிக்காவில் அவர் தமிழில் பேசி அசத்தினார். ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி தனது தமிழ்ப்பற்றை வெளிக்காட்டினார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் உள்ள பற்றை உணர்த்தியே வந்துள்ளார். 

இன்று தான் தமிழர்களின் பாரியம்பரியத்தின் மீது கொண்டுள்ள பற்றை ஆழமாக பதிவு செய்துவிட்டார். அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்’என தமிழில் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். 

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என மற்றொரு ட்விட்டையும் தமிழில் பதிந்தார். 

இதன் உச்சகட்டமாக மோடி மாமல்லபுரத்தில் செய்த காரியம் தமிழார்களையே வியக்கவைத்துள்ளது.  மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு பகுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து தோலில் துண்டு போட்டு தமிழக பாரம்பரிய உடையில் அசத்தினார். அங்குள்ள பாரம்பரியமிக்க கலை சிற்பங்களை பற்றி விளக்கிக் கூறினார்.

  

இதனை பார்த்து தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவே வியந்து கிடக்கிறது.  7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்களை பற்றி பெருமையாக விளக்கினார். அப்போது சீன அதிபர் ஷி ஜின் பிங்  வெள்ளைச் சட்டை- கருப்பு பேண்டில் இருந்தார். வேட்டி சட்டை அணிந்து மோடி தோன்றி தமிழக மக்களை ஆச்சர்யத்தில் மோடி ஆழ்த்தியதால் இத்தனை நாட்களாக மோடியை தமிழகத்திற்கு எதிராக சித்தரித்து வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வயிற்றெரிச்சலில் தவித்து வருகின்றனர்.