Asianet News TamilAsianet News Tamil

அடுத்து என்ன ..? ஆயத்தமாகி விட்டார் மோடி..!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் தலைமயிலான ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது 

modi arranged meeting with mps reagarding 5 state election results
Author
Chennai, First Published Dec 13, 2018, 12:48 PM IST

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது. 

மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியானது.பாஜக வின் கோட்டையாக இருந்த மத்திய பிரதேசத்தில் கூட நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது

modi arranged meeting with mps reagarding 5 state election results

இந்த தோல்வியை தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கூட்டம் இன்று  பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவரான அமித்ஷா உள்பட எம்பிக்கள் பலர் கலந்துக்கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக எந்த அளவிற்கு பாடுபட வேண்டும் என்பது குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

modi arranged meeting with mps reagarding 5 state election results

மேலும், பாஜக தோல்வி அடைந்தது என கூற முடியுமே தவிர, படு தோல்வி என கூற முடியாத அளவில், சரிக்கு சமமாக வலுவான கட்சியாக தான் பாஜக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios