கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உங்களது நடவடிக்கை எங்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் தூய்மை பணி திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள வாய்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதலமைச்சர் நாராயணசாமி, தானே வாய்க்காலில் இறங்கி சகதிகளை அகற்ற முன்வந்தார். 

தன்னுடைய வேட்டியை மடக்கி கட்டிய அவர் முழங்கால் அளவு உள்ள சாக்கடையில் இறங்கினார். 

பிறகு, மண் வெட்டியைக் கொண்டு கால்வாயில் இருந்து குப்பைகளையும், மண்ணையும் அகற்றினார். இந்தியாவிலேயே இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் இதுபோன்ற ஒரு செயலில் இறங்கியதை நாம் பார்த்திருக்க முடியாது. அப்படி மக்கள் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரியோ, அரசியல்வாதியோ, முதலமைச்சரையோ நாம் இதுவரை பார்க்கவில்லை. 

அரசியல் தலைவர்கள், தூய்மை பணியை துவக்கி வைக்கும்போதுகூட துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால்,  முதலமைச்சர் ஒருவர், முழங்கால் அளவுள்ள சாக்கடை நீரில் இறங்கி, சாக்கடையை தூய்மை செய்த நிகழ்வு, அனைவரிடத்திலேயும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நாராயணசாமி ஜீ, உங்களது நடவடிக்கை, எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று என்று பிரதமர் 
மோடி பதிவிட்டுள்ளார்.