பட்டைய கிளப்பும்  அமித்ஷா - மோடி ...! இப்போதே கதம் கதம்..!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியான பிறகு பாஜக தரப்பில் மிகவும் குஷி ஆகி உள்ளனர். அதனுடைய எதிரொலியாக வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாட இப்போதே ஸ்வீட் எடு கொண்டாடு என்ற பாணியில் ஸ்வீட் தயாரிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு முன்னதாக நேற்று டெல்லியில் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது பாஜக. அதன்படி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவையில் பங்கேற்றவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நேற்று 36 கூட்டணித் தலைவர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டு உள்ளனர். அதேவேளையில் மூன்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியாததால் அவர்களின் சார்பாக ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமாக பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 

மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் தருவாயில் தேசியவாதம் மற்றும் வளர்ச்சி, முக்கியமாக தேசிய பாதுகாப்பு இவை மூன்றையும் அடிப்படையாக கொண்டுதான் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியின் போது பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வந்த பாஜக, ஆட்சியை மீண்டும் பிடிக்கும் தருவாயில் அடுத்து வரும் ஐந்து ஆண்டு காலத்தில் நாட்டின் வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புதிய அமைச்சரவை குறித்து இப்போது அதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்களாம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும். இதற்கிடையில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்க சில மணி நேரம் மட்டுமே உள்ள இந்த தருணத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை இரவு வெளியான உடன் ஜனாதிபதியை சந்திப்பது, பதவியேற்கும் தேதி உள்ளிட்ட... யாரெல்லாம் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார்கள்? எங்கு பதவி ஏற்க போகிறோம்? யாருக்கெல்லாம் எந்தெந்த பதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாம் உள்ளதாம் பாஜக மேலிடம்.