இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக  நடந்து முடிந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்பது தொடர்பான எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியாகி காங்கிரசை அதலபாதாளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.   

TIMES - VMR இணைந்து நடத்திய எக்ஸிட் போல் ரிசல்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என துல்லியமாக சொல்கிறது. இதில், பாஜக அணி- 306 ( 41.1%)  காங்கிரஸ் அணி- 132 (31.7%) இதர கட்சிகள் 132 (27.2%) என வெல்லும் என தெரிகிறது.

NEWS 18 TAMILNADU சேனலின் எக்ஸிட் போல் ரிசல்டிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிஜேபி - 292 முதல் 312 சீட் ஜெயிக்கும், காங்கிரஸ் - 62 முதல் 72 ஜெயிக்கும் எனவும், மற்ற கட்சிகள் 102 முதல் 112 தொகுதிகளில் ஜெயிக்கும் என கூறியுள்ளது.

சி வோட்டரின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் பிஜேபியே  மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக தெரிகிறது, இதில் பிஜேபி அணி - 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் 128 தொகுதிகளையும், பகுஜன்-சமாஜ்வாதி - 40 தொகுதிகளும், இதர கட்சிகள் 87 வெல்லும் எனது தெளிவாக வெளியிட்டுள்ளது. 

இந்தியா டுடே கருத்து கணிப்பில் தமிழ் நாட்டில் ஜெயிக்கப்போவது யார் என திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.