Mobs of conspiracy to drive from power - the campaign Paneer Open Doc
ஆர்.கே.நகரில் அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். அப்போது சதிகார கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும் என சுயேட்சைகள் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே உண்மையான அதிமுக நாங்களே எனவும், கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும், ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையரிடம் ஒ.பி.எஸ் தரப்பினர் மனு அளித்தனர்.
இதில் சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் கடும் போட்டி நிலவியதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற கட்சியின் பெயரில், மின்கம்பம் சின்னத்தின் கீழ் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
மதுசூதனனை ஆதரித்து ஒ.பி.எஸ் நேற்று ஃபேஸ்புக்கில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தனது ஃபேஸ்புக்கின் முதல் பதிவாக சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி எனவும், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இணைந்து செயல்படுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
அதைதொடர்ந்து இன்று ஆர்.கே.நகரில் அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து 39-வது வட்டம் நாகூரான் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார்.
உரையில் ஒ.பி.எஸ் கூறியதாவது :
அம்மாவின் ஆத்மா எங்களை வழிநடத்துகிறது. நமது இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்மிடம் கொடுத்து விட்டு சென்றார் ஜெயலலிதா.
நல்லாட்சி தர என்னிய ஜெயலலிதாவை இழந்தது நமக்கு பேரிழப்பு. அவர்கள் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்கான மர்ம முடிச்சுகள் விரைவில் வெளியாகும். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை வீட்டு பக்கமே வரக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த எதிரி தினகரன்.
இந்த கொலைகார கூட்டத்தை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விரட்டியடிக்க வேண்டும்.
எனவே ஆர் கே நகர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் மதுசூதனன் அவர்களுக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.
