அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செல்போம் செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செல்போம் செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரும் மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களும் தேர்வு நடத்தப்படும். 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதேபோல் ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும். அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செல்போம் செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தமிழக சட்டபேரவையில் இன்று பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் அந்த செயலியின் மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் இந்த செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை. 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஆண்டுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டம் மூலம் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 செலவாகிறது. எனவே பழைய ஓய்வூதியம் என்பது சாத்தியமற்றது. மேலும் சென்னை திருமங்கலத்தில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் இயக்குவது பற்றி சாத்தியக்கூறு ஆராயப்படும் என்று தெரிவித்தார்.