"தமிழக அரசு இதை செய்தே ஆக வேண்டும்!" களத்தில் குதித்த கமல்ஹாசன்

தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது.

MNM welcomes that tn govt has announced the regulations for setting up Area Councils and Ward Committees

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட ட்விட்டர் பதிவில், ‘கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

MNM welcomes that tn govt has announced the regulations for setting up Area Councils and Ward Committees

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios