Asianet News TamilAsianet News Tamil

58 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருந்த நாக்பூரில் வேட்டை... கெத்து காட்டிய மகா விகாஸ் அகாடி கூட்டணி..!

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு கால பாஜக கோட்டையாக இருந்த நாக்பூரில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  5 இடங்களுக்கான தேர்தலில் ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

MLC election results...Big setback to BJP.. Congress wins Nagpur
Author
Nagapur, First Published Dec 5, 2020, 3:57 PM IST

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு கால பாஜக கோட்டையாக இருந்த நாக்பூரில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  5 இடங்களுக்கான தேர்தலில் ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே  தலைமையிலான, மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 78 சட்டமேலவை  தொகுதிகளில் காலியாக இருந்த அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதிகளுக்கும் கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

MLC election results...Big setback to BJP.. Congress wins Nagpur

இதில், தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தலா 2 தொகுதிகளிலும், சிவசேனா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. பாஜக 4 இடங்களில் போட்டியிட்டது. பாஜக ஆதரவுடன் ஒரு தொகுதியில் சுயேச்சை போட்டியிட்டார். இதில், 12  லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்களித்தனர். இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று பிற்பகல் வரை நடைபெற்றது.

இதில், அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அமரவாதியில் போட்டியிட்ட சிவசேனா, சுயேச்சை வேட்பாளரிடம் தோற்றது. புனே ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ்  வெற்றி பெற்றது. அதேபோல்,  பாஜவின் 58 ஆண்டு கால கோட்டையாக கருதப்பட்ட நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

MLC election results...Big setback to BJP.. Congress wins Nagpur

சட்டமேலவை தேர்தல் தோல்வி குறித்து பாஜகவைச் சேர்ந்த மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்;- இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் கூட்டு பலத்தை கணிக்க தவறிவிட்டோம். தற்போது அவர்கள் எவ்வளவு பெரிய போட்டியை தருவார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். அடுத்த தேர்தலுக்கு நாங்கள் நன்றாக தயார் ஆவோம் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios