அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலா தரப்பு கதிகலங்கி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் ஆளுநர் தமிழகம் வரும் வரை, எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக இருக்குமாறும் சசிகலா தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களும், இளைஞர்களும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளனர்.

அதாவது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து எம்.ஏ.க்களின் செல்போன் நம்பர்களை கண்டறித்து சமூக வலைதளங்கலான ஃபேஸ்புக், டுவிட்டர், மெயில், ஆகியன மூலம் அனைவருக்கும் பரப்பி வருகின்றனர்.

இதையடுத்து தொகுதிவாசிகள், கிராமவாசிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பெரும்பாலானோர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு கொடுக்குமாறு எம்.ஏ.ஏக்களுக்கு ஃபோன் மூலம் வற்புறுத்தி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவிற்குதான் நாங்கள் ஓட்டு போட்டோம். சசிகலாவிற்கு அல்ல எனவும் கருத்து கூறி வருகின்றனர்.

இன்னும் ஒருசிலர் எம்.எல்.ஏக்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள லேண்ட்லைன்களுக்கு கால் செய்து பன்னீர்செல்வத்திற்கான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சொகுசு ஓட்டலில் நிம்மதியாக இருக்கலாம் என்று சென்ற எம்.எல்.ஏக்களுக்கு மண்டை காய்ச்சல் ஆரமித்துள்ளது.

நல்லது கெட்டதுக்கு கூட தொகுதி பக்கம் செல்ல முடியுமா என்ற அச்சம் எம்.எல்.ஏக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால் எம்.எல்.ஏக்கள் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து தூக்கி எறிகின்றனராம்.

இதனிடையே change .org என்ற இணையதள மூலம் ஒரு லட்சம் பேர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறை பன்னீருக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

பன்னீர் செல்வத்திற்கு மக்கள் ஆதரவு உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டும், சசிகலாவுக்கு உள்ளது. எனவே மக்கள் தங்களது பலத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.