நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்கு கிடைக்கும் என உறுதியளித்து விட்டு அந்தர் பல்டி அடித்து தமிழர்களுக்கு துரோகம் செய்த   நிர்மலா சீத்தாராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி அழித்திருப்பது நமது உணர்வை கிண்டல் செய்வது போல் உள்ளது என காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரிணி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றினால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் பல்டி அடித்ததால் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உத்தரவிடப்பட்டது.

இதனால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

,

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்கு கிடைக்கும் என உறுதியளித்து விட்டு அந்தர் பல்டி அடித்து தமிழர்களுக்கு துரோகம் செய்த   நிர்மலா சீத்தாராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி அளித்திருப்பது நமது உணர்வை கிண்டல் செய்வது போல் உள்ளது என தெரிவித்தார்.

நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு அனிதா சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் விஜய தாரிணி வலியுறுத்தினார்.