கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசியதற்காக நடிகர் கருணாஸ் இந்த வாரம் ஞாயிரன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாஸ் பேசிய பேச்சு கடந்த புதன்கிழமை அன்று ஊடகங்களில் வெளியான உடனேயே கருணாஸ் மீது கொலை முயற்சி, காலை மிரட்டல், ஜாதிக்கலரவத்தை தூண்டும் வகையில் பேசுதல், கூட்டுச்சதி என எட்டு பிரிவுகளில் போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்தனர். மறுநாள் கருணாசை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீசார் தகவல்களை கசியவிட்டனர். 

மேலும் கருணாஸ் தலைமறைவு என்றும் போலீசார் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தனர். ஊடகங்களும் கருணாஸ் தலைமறைவு என்று செய்திகளை ஒளிபரப்பினர். ஆனால் கருணாசோ செய்தியாளர்களை சந்தித்து தான் தலைமறைவாகவில்லை என்று பேட்டி கொடுத்தார். மேலும் தான் கைதுக்கு பயப்படவில்லை என்றும் தனது சமுதாயம் தன்னுடன் இருப்பதாகவும் கருணாஸ் பேசினார். கடந்த வெள்ளியன்று கருணாஸ் இப்படி பேட்டி கொடுத்த நிலையில், அன்றும் அவர் கைது செய்யப்படவில்லை. சனிக்கிழமை  இரவு கருணாசை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் கருணாசை போலீசார் கைது செய்தனர். கருணாஸ் பேசி ஒரு வாரம் கழித்து கைது செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கு மட்டும் பதிவு செய்து கருணாசை நீதிமன்றத்திற்கு அழைக்கழித்தால் மட்டும் போதும் என்று தான் அரசு நினைத்துள்ளது. ஆனால் வெள்ளியன்று கருணாஸ்  கொடுத்த பேட்டியின் சில விஷயங்கள் தான் எடப்பாடி அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செய்தியாளர்களை சந்தித்த கருணாசிடம் கூவத்தூரில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் என்று கூறினீர்களே? அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த கருணாஸ், கூவத்தூரில் நிகழ்ந்தவைகள் பற்றி நீதிமன்றத்தில் தான் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார். கருணாசின் இந்த பேட்டி தான் மேலிடத்தை கோபப்படுத்தியுள்ளது. ஏனென்றால் கூவத்தூரில் இருந்த போது எம்.எல்.ஏக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் அதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த தகவல்களும் கருணாசுக்கு முழு அளவில் தெரியும். இந்த நிலையில் கூவத்தூர் ரகசியங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்ற கூறியதால் தான் தற்போது கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.