எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  

சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடி உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 

முன்னதாக சட்டப்பேரவையில், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.