Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு வந்த சாமி பயம்.. வயசாகியும் பக்குவப்படாத ஆர்.எஸ் பாரதி.. அமைச்சர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.

 திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி அதிமுகழகத்தையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது, ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் பதவியில் இருப்பது திமுக போட்ட பிச்சை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார், 

MKStalin has fear on God .. RS Bharathi will not mature with age .. Public warning gave by the Minister.
Author
Chennai, First Published Feb 13, 2021, 11:15 AM IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 17 மாவட்டங்களில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வழக்கம் போல இரண்டு கட்சிகளுக்கும் இடையே நேரெதிர் போட்டி நிலவும் என்பதால், இரு கட்சிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அவர் மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 MKStalin has fear on God .. RS Bharathi will not mature with age .. Public warning gave by the Minister.

ஸ்டாலின் தூண்டுதலின்பேரில் தொடர்ந்து ஆர் எஸ் பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் அநாகரிகமாக பேசிவருகிறார் எனவும் எனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  ராஜ் சத்யன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

 

MKStalin has fear on God .. RS Bharathi will not mature with age .. Public warning gave by the Minister.

அதேபோல் திருச்சி, சேலம், ராமநாதபுரம், உட்பட 17 மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  பி.வி.ஆர் ராஜ், கடந்த 9ஆம் தேதி அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி மறைந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.

அவர் மீது பொதுவெளியில் பெண் சமூகத்தை இழிவு செய்தல், அவதூறு பரப்புதல், சட்டம் ஒழுங்கை கெடுத்தல், வன்முறை தூண்டுதல் ஆகிய பிரிவுகளை தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மண்டலத்தை சேர்ந்த சேலம், கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் என மொத்தம் 17 மாவட்டங்களில் அவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இன மக்களை அவர் இழிவு படுத்திப் பேசினார், அதை ஸ்டாலின் கண்டிக்கவில்லை, இதை ஸ்டாலின் பெயராலேயே அவர் இவ்வாறு பேசி வருகிறார்.  இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் திமுகமீது கொந்தளிப்பு அடைந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். 

MKStalin has fear on God .. RS Bharathi will not mature with age .. Public warning gave by the Minister.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி அதிமுகழகத்தையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது, ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் பதவியில் இருப்பது திமுக போட்ட பிச்சை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார், இதை ஸ்டாலின் எந்தவிதத்திலும் கண்டிக்கவில்லை, எங்கு பார்த்தாலும் அவர் வேல் பிடித்துக் கொண்டிருக்கிறார், ஸ்டாலினுக்கு சாமி மேல் பயம் வந்துவிட்டது, ஆனால் சாமி குற்றத்தை விட பெரிய குற்றம் ஆர்.எஸ் பாரதி செய்தது, எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்று வயதாகியும் ஆர்.எஸ் பாரதிக்கு தெரியவில்லை. தொடர்ந்து அரசு இப்படி பேசி வந்தார் சட்டம் தன் கடமையைச் செய்யும் என அவர் எச்சரித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios