Asianet News TamilAsianet News Tamil

தயாநிதியை காய்ச்சி எடுத்த மு.க.ஸ்டாலின்... உள்நோக்கம் இல்லாமல் ஒத்தடம் கொடுத்த திருமாவளவன்..!

தாழ்த்தப்பட்டவர்களா நாங்கள்..? எனக் கேட்டு அம்மக்களை அவமானப்படுத்தும் வகையில் உளறிக் கொட்டிய தயாநிதியை கண்டிக்காமல் திருமாவளவன் கூட்டணியில் இருப்பதால் மேம்போக்காக சுட்டிக்காட்டியதால் விசிக தொண்டர்கள் தங்கள் தலைவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

MK Stalin who distilled Dayanidhi
Author
Tamil Nadu, First Published May 15, 2020, 12:05 PM IST

தாழ்த்தப்பட்டவர்களா நாங்கள்..? எனக் கேட்டு அம்மக்களை அவமானப்படுத்தும் வகையில் உளறிக் கொட்டிய தயாநிதியை கண்டிக்காமல் திருமாவளவன் கூட்டணியில் இருப்பதால் மேம்போக்காக சுட்டிக்காட்டியதால் விசிக தொண்டர்கள் தங்கள் தலைவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை தயாநிதியை அழைத்து மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்த சம்பவமும் நடந்துள்ளது. MK Stalin who distilled Dayanidhi

தி.மு.க. எம்.பி-க்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?", என்று கூறியுள்ளார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி எண்ணம் அவரது மனதில் ஊன்றி இருப்பதையே காட்டுவதாக பலரும் கருதுகின்றனர். தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.MK Stalin who distilled Dayanidhi

தயாநிதியின் இந்தப்பேச்சு திமுகவிற்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுப்பான மு.க.ஸ்டாலின், ‘’உங்கள் பேச்சால் நாம் முன்னெடுத்த உழைப்புகள் எல்லாம் வீணாகப்போய்விட்டது. ஒரு லட்சம் மனுக்கள் அளித்த செய்தி பின்னுக்கு போய், கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தி விட்டிர்கள். பொதுவெளியில் எப்படி அந்த வார்த்தையை பயன்படுத்தலாம்? ஏற்கெனவே மோடி பற்றி நீங்கள் பேசிய பிச்சைக்காரர் என்கிற பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போதே உங்களை எச்சரித்தேன். ஆனாலும் நீங்கள் கேட்கவில்லை. வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை’’ என தயாநிதியை அழைத்து கடிந்துள்ளார். MK Stalin who distilled Dayanidhi

 இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், ட்வீட் போட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் மன்னிப்பு கோரி தயாநிதி மாறன் ட்வீட் வெளியிட்டார். பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்று கூறி அரசியல் செய்து வரும் திருமாவளவனோ, இது குறித்து ட்விட்டர் பதிவில், "தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்." என்று பதிவிட்டுள்ளார்MK Stalin who distilled Dayanidhi

இருவரின் கருத்துக்களுக்கும் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், ""நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா.? சொல்லவே வாய் கூசுகிறது நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..?" இந்த தயாநிதியின் பேச்சிற்கு உள்நோக்கம் இல்லை என்று ஒத்தடம் கொடுக்கும் திருவாளர் திருமா, இதெல்லாம் தகுமா..? வேறொருவர் பேசியிருந்தா விடுதலை சிறுத்தைகள் தான் விடுமா..?" என்று பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios