இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘’ரஜினி சார் பேட்டி கொடுத்துவிட்டார். இன்றைக்கு அதை எப்படி திமுக ஆதரவு ஊடகங்கள் திரித்து விவாதங்களை உருவாக்கலாம் என்று தீவிரமாகக் களத்தில் இறங்கி விடும்.

வள்ளுவனுக்குக் காவி சாயம் பூசியது போல் எனக்கும் முயல்கிறார்கள் பாஜக ஆள் என்று. மாட்டமாட்டோம் என்று சொல்கிறார். எனக்கும் காவி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்ற சொன்னார் ரஜினி? எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்று தானே அர்த்தம் கொள்ளும்படி சொன்னார். தான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த ரஜினி அவர்களை திமுக ஆதரவு வட்டம் எப்படியாவது பாஜக என்று பட்டம் கட்ட வேண்டும் என்று துடித்தது. அதற்காக வேலைகளைச் செய்தார்கள், அதற்குப் பதில் கொடுக்கும் வண்ணம் அவர் எனக்கு அப்படி சாயம் பூச முடியாது என்று சொல்கிறார்.

இன்றைய விவாதம் கிடைத்துவிட்டது. இப்போது இதை வைத்து வசதியாக திமுக குழப்பத்தை உருவாக்கத் துடிக்கும். எனவே கொஞ்சம் கருத்துக்களை உடனடியாக அவசர கதியில் தெரிவிக்காமல் பொறுமை தேவை. ரஜினி சார் மனம் நான் அறிவேன். அவர் ஒரு தேசியவாதி ஆன்மீகவாதி. இந்த இரண்டும் அவருடைய பலமாக இருக்கிறது. அதனையே பலவீனமாக மாற்ற திமுக துடிக்கிறது. எனவே கொஞ்சம் ரஜினி சார் சார்ந்த விசயத்தில் தேசியவாதிகள் கவனமாகக் கையாளவும்.

பேட்டியில் அவர் தெளிவாகக் கூறியுள்ளார் "பாஜக வரைந்து வெளியிட்ட திருவள்ளுவர் படத்திற்குக் காவி நிறம் கொடுத்துள்ளார்கள். அது அவர்கள் விருப்பம். அவர்கள் நாடு முழுவதும் உள்ள சிலைகளுக்குக் காவி நிறம் கொடுக்க வேண்டும் என்றா சொன்னார்கள்? இதைப் போய் அவசியம் இல்லாமல் பெரிதாக்கும் (ஸ்டாலின்) அரசியல் கீழ்த்தரமானது " என்று தான் கூறியுள்ளார்.

திமுக அதற்காக வேலை செய்யும் செய்து ஊடகவியலாளர்கள் கூட்டம் ஒரு கேடுகெட்ட கூட்டம் எனவே எச்சரிக்கை அவசியம்’’என அவர் தெரிவித்துள்ளார்.