திமுக தலைவராக 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து உலக சாதனை படைத்த கருணாநிதியின் மறைவுக்குப்பின் திமுகவின் தலைவராக செயல் தலைவராக இருக்கும் முக ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார். 

காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து நள்ளிரவில் கோபாலபுலம் இல்லத்திற்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர அஞ்சலிக்கு பிறகு சிஐடி காலனிக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதன்பிறகு அதிகாலை ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு இன்று மாலை 4 மணிக்கு, அண்ணா சமாதி பகுதிக்கு ஊர்வலம் கிளம்புகிறது. அங்கு கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. திமுக தலைமை கழகம் இதை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே 19ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தலைவர் பதவியை பதவி ஏற்க இருப்பதாக இருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக மாநில நிர்வாகிகளை, மாற்றப்பட உள்ளதாக திமுக வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்தது. இதனையடித்து கருணாநிதி மறைந்ததையடுத்து, நாளை திமுக தலை\வராக மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.  கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனுக்கு கவுரவ பதவி அளிக்கப்பட்டு, அவரிடமுள்ள மாநில பொதுச்செயலர் பதவியை, துரைமுருகனுக்கு வழங்க உள்ளதாம்.அதேபோல, ஐ.பெரியசாமிக்கு மீண்டும் துணை பொதுச்செயலர் பதவியும், மற்றொரு துணை பொதுச்செயலர் வி.பி.துரைசாமியின் பதவி, அ.ராசாவுக்கும் வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கான ஒதுக்கீட்டில், துணை பொதுச் செயலராக உள்ள, சுப்பு லட்சுமி ஜெகதீசனின் பதவிய பிடுங்கி.  மகளிர் அணி செயலராக உள்ள கனிமொழிக்கு,  வழங்கப்படுகிறது. 

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 27.07.1969 அன்று திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, கடந்த 49  ஆண்டு காலமாக கட்சியை எத்தனையோ அரசியல் சூறாவளிகளுக்கு இடையில், இரண்டு பிளவுகளைச் சந்தித்த போதும் கட்டுக்கோப்பு குலையாமல், சிதையாமல் கடந்த சில ஆண்டுகள் வரை திமுகவை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த பெருமைக்குரியவராக விளங்குகிய கருணாநிதியின் மறைவுக்குப்பின் 50 ஆண்டுகளுக்குப்பின் திமுகவிற்கு புதிய தலைவராக தற்போதைய செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.