திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த இளைமையான பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உடன்பிறப்புகள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

 

அதே வெளை தினமும் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்பவரல்ல.  அப்படியே இருந்தாலு அவர் வீட்டிற்குள் ப்மட்டுமே பயிற்சி செய்வார். இந்த ஸ்டில் வெளியில் பாலத்தில் நின்று எடுத்ததை போல் உள்ளது. இடு பப்ளிசிட்டிக்காக எடுக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள். அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக வாங்கப்பட்ட இந்த சைக்கிளின் விலை 1 லட்சத்து 74 ஆயுரத்து 490 ரூபாய். ஒரே ஒரு ஸ்டில்லுக்காக மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாயை வீணடித்திருக்கிறார்.

 

இந்த சைக்கிள் பயிற்சி புகைப்படங்கள் கூட பிரஷாந்த் கிஷோரின் ஐடியாவாகத்தான் இருக்கும். இந்த புகைப்பட விளம்பரத்தால் பெரிதாக மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. பிரஷாந்த் கிஷோரின் வெற்று ஐடியாக்களுக்கு ஸ்டாலினின் இந்த சைக்கிள் பயிற்சி புகைப்படமும் ஒரு சான்று என்கிறார்கள் உடன்பிறப்புகள். இன்னொரு விஷயத்தையும் இங்கே உணர வைக்க வேண்டியுள்ளது. கொரோனா அச்சத்தால் கட்சியினரைக்கூட மு.க.ஸ்டாலின் சந்திக்காமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் சந்தித்து வருகிறார். அவசரம் ஏற்பட்டா ஒழிய வீட்டை விட்டு பெரும்பாலும் அவர் வெளியேறுவதில்லை. இந்த கொரோனா காலத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி சைக்கிள் பயிற்சி எடுத்துக் கொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்கிறார்கள் அவரைப்பற்றிய விவரம் அறிந்தவர்கள்.