திருமாவின் தூக்கத்தைக் கெடுத்த ஸ்டாலின்!! மநகூக்கு ரிவென்ஜ் எடுத்த திமுக...
திமுக செய்வதெல்லாம் பார்த்தால் மநகூ ஆரம்பித்து அரசியல் விளையாட்டு காட்டியதற்கு ஸ்டாலின் எடுக்கும் ரிவென்ஜ் தான் என சொல்கிறார்கள் இளஞ் சிறுத்தைகள்.
கடந்த 2016 தேர்தலுக்கு முன்பு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கலைஞர், தொண்டர்களை கண்கலங்க வைத்தார். அது என்னன்னா? இது தான் நான் சந்திக்கும் கடைசித் தேர்தல், எப்படியும் முதல்வராக ஆகிவிடுவோம் என அதிகமாக நம்பினார்.
கூட்டணிக்காக விஜயகாந்த் வருவார், பழம் நழுவிக்கொண்டிருக்கிறது பாலில் விழும் என நம்பினார். ஆனால் கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணியென அமைத்து திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்தனர். ஆனால், காலியானது மக்கள் நல கூட்டணி தான் பலமாக இருந்த விஜயகாந்த்தின் சோலியை முடித்து சோலோவாக்கினர். கலைஞரை கடையாக முதல்வராக முடியாத மாதிரி தடுத்தனர். இதையெல்லாம் மறக்கவே இல்லை போல திமுக.
ஆமாம், திமுக கூட்டணியில் ஐக்கியமாக்கியுள்ள வைகோ, திருமா கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக வீக் ஆக இருக்கும் தொகுதிகளை தலையில் கட்டி தள்ளி விட்டுள்ளது. அதாவது எதிரணி அசால்ட்டாக ஜெயிக்கக்கூடிய தொகுதிகளை கொடுத்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிந்த ஸ்டாலின் மதிமுக, விசிக எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற கேள்விக்கு, “எங்கள் யோசனையைச் சொல்லி உள்ளோம். அதுகுறித்து அவர்கள் யோசித்து முடிவெடுத்த பிறகு அறிவிப்பார்கள்” என்று சொல்லியிருந்தார்.
திமுகவின் யோசனையாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளிடம் சொல்லப்பட்டிருப்பது தனி சின்னம் வேண்டாம், உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்பதுதான். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடலாம். ஆனால், பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டும் இருக்கும், அதாவது அங்கீகாரமற்ற கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்றவற்றுக்குத் தனி சின்னம் என்றால் அது தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாகத்தான் கிடைக்கும் என்பதால் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் திருமாவளவன். கட்சிக்குள், உதயசூரியனில் நிற்பதற்குக் கடுமையான எதிர்ப்பு நிலவும் நிலையில், தனக்கு நன்கு அறிமுகமான திமுக சீனியர் நிர்வாகிகளிடம் சில விஷயங்களை மனம் குமுறிக் கொட்டியிருக்கிறார் திருமாவளவன்.
“சில வருஷத்துக்கு முன்பு கட்சி ஆரம்பித்த கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரனும் உதயசூரியன் சின்னத்தில நிக்கணும். ஆனால், 90லேர்ந்து விசிக நடத்திக் கொண்டிருக்கும் திருமாவளவனும் உதயசூரியன் சின்னத்துல நிக்கணும். இது என்ன நடைமுறை? விசிக தேர்தல் பங்களிப்பு இல்லாமல் நடத்தி மூப்பனார் வலியுறுத்தலால் தேர்தல்ல பங்குபெற்று இன்னிக்கு தனித்துவமான ஒரு கட்சியா நடத்திக்கிட்டிருக்கோம்.
இப்ப நீங்க உதயசூரியன்ல நில்லுங்கனு சொல்றது, எங்க தனித்துவத்தை அழிக்குற மாதிரி ஆகாதா? தேர்தல் வெற்றிக்கான கொள்கை வகுப்புனு இதை திமுக சொல்லுது. ஆனா, இது 25 வருஷமா பல வழக்குகள், நெருக்கடிகள், களப் போராட்டங்களைத் தாண்டி கட்சி வளர்த்த எங்களின் அடையாளச் சிதைப்புதானே?” என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் தனது மனம் உடைந்து கலங்கினாராம் திருமாவளவன்.
திமுக செய்வதெல்லாம் பார்த்தால் மநகூ ஆரம்பித்து அரசியல் விளையாட்டு காட்டியதற்கு ஸ்டாலின் எடுக்கும் ரிவென்ஜ் தான் என சொல்கிறார்கள் இளஞ் சிறுத்தைகள்.