Asianet News TamilAsianet News Tamil

மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா..? மு.க.ஸ்டாலின் மழுப்பல்..!

மத்திய அரசில் அங்கும் வகிப்பது குறித்து மே 23-ம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழுப்பான பதிலை தெரிவித்துள்ளார்.

mk stalin press meet
Author
Tamil Nadu, First Published May 20, 2019, 3:20 PM IST

மத்திய அரசில் அங்கும் வகிப்பது குறித்து மே 23-ம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழுப்பான பதிலை தெரிவித்துள்ளார்.

 mk stalin press meet

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக கருத்து கணிப்பு குறித்து பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

 mk stalin press meet

 மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா? என செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என மழுப்பலான பதிலை அளித்தார்.  முதல் ஆளாக ராகுல் காந்தி தான் தங்களது கூட்டணியின் பிரதம் வேட்பாளர் என ஸ்டாலின்  பிரகடனப்படுத்தி இருந்தார். அடுத்து மூன்றாவது அணி அமைக்க ஆதரவு கோரி வந்த சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்தித்தார். வெற்றி பெற்ற பின்னர் மோடி பிரதமாரக ஸ்டாலின் ஆதரவு கொடுக்கலாம் என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு என கேட்கப்பட்டதற்கு 23ம் தேதிக்கு பிறகு விளக்கம் அளிப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. mk stalin press meet

மே 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, வரும் 23-ம் தேதி டெல்லியில் கூட்டம் என யார் சொன்னது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கேள்வி எழுப்பினார். 23ம் தேதி காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்டாலினின் இந்தப் பதிலும் ராகுல் பிரதமராக ஆதரவு தெரிவிப்பாரா என்கிற  சந்தேகத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறது.mk stalin press meet

ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் நிச்சயம் தி.மு.க. பங்கேற்கும் என்றார். மே 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதற்கு சோனியாகாந்தி தி.மு.க., தலைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இரு தலைவர்களின் முரண்பட்ட கருத்துகளால், அரசியல் நோக்கர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios