தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைத்து கொண்டுள்ளது ராமதாஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏவுமான தமிழரசு சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அவர் மட்டுமின்றி சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினரும் திமுகவில் இணைந்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய அரசியலில் மிக முக்கிய தலைவர்கள் பலரும் கட்சி மாறி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் கட்சி தாவல் தொடங்கி இருக்கிறது. சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., தமிழரசு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், மாநில, மாவட்ட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு நீக்கப்பட்டார். அப்போது முதலே பாமக தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார்.

நேற்று அமமுகவில் இருந்து வி.பி.கலைராஜன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சமீபகாலமாக பலரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.