பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை ராஜ்பவனுக்கு செல்கிறார். அப்போது, தற்போது உள்ள தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் மீதான அடுக்கான ஊழல் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

 

முக்கிய 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்த வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்ட போதும் தற்போது அதிகளவில் புழங்குவதாக தொடர்பாக புகார் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எஸ்.பி.கே நிறுவனம் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாதுரை சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், ஒருவருடத்திற்கு பிறகு இன்று மாலை மு.க.ஸ்டாலின் சந்திக்க ஆளுநரை சந்திக்க உள்ளது அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.