ரஜினி தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்து விட்டார். இதனால் திமுக உடன்பிறப்புகள் உற்சாகமாகி குஷியாகி வருகின்றனர்.

 

1996ம் ஆண்டு ரஜினி ஆதரவு கொடுத்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் ரஜினி ரசிகர்கள் பலரும் திமுக அனுதாபிகளாக இருந்து வந்தனர். ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த பிறகு திமுக பலத்த எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பதிவு செய்து வந்தது. காரணம், ரஜினி அனுதாபிகளின் வாக்குகள் சிதறும் என்பதே. இதனால் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் எனவும் பல அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரித்து வந்தனர். 

இது தொடர்பாக திமுக தேர்தல் பிரச்சார வியூகராக நியமிக்கப்பட்ட பிரஷாந்த் கிஷோர் கூட சமீபத்தில் டெல்லியில், முக்கியத் தலைவர்களிடம், ‘’ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடும் முன்பு வரை திமுக வெற்றி பெறும் என நினைத்து இருந்தேன். ஆனால் அவரது அரசியல் வருகையால் திமுக வெற்றி பெறுவது சந்தேகம் தான்’’ என அவர் கூறியிருந்ததாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். 

ரஜினி அரசியல் வருகையால், அவரது நண்பரான மு.க.அழகிரியும் கைகோர்த்து செய்லபடுவார் என்றும் பேச்சுகள் எழுந்தன. இதுவும் திமுகவுக்கு மரண பயத்தை காட்டியது. மற்றொரு விஷ்யமாக அதிமுக வாக்குகள் அப்படியே இருக்கும். திமுக வாக்குகள் மட்டுமே சிதையும். ஆளும் கட்சியான அதிமுக வாக்குகள் கூட ரஜினிக்கு கிடைக்கும். ஆகையால் அதிமுக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டதும் திமுகவை திகிலூட்டியது. 

இதெற்கெல்லாம் முடிவாக ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்தது, திமுகவை குஷியில் ஆழ்த்தி உள்ளது. அதேவேளை அதிமுகவை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.